பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது

தொண்டாமுத்தூர்: கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், சென்னையை சேர்ந்த கார்த்தி என்ற மாரியப்பனுடன், இன்ஸ்டாகிராமில் பேசி வந்தார். கார்த்தியின் நடவடிக்கை பிடிக்காததால், பேசுவதை நிறுத்தினார். கோபமடைந்த கார்த்திக் அவரது நண்பர்களான அபினேஷ், மார்க்கண்டேயன், கிரித்திக் ரோஷன் ஆகியோருடன் வந்து, மே 24ல் இளம்பெண்ணின் வீட்டின் வாசலில், 3 பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றார்.

தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று மாதங்களுக்கு முன், கிரித்திக்ரோஷனை சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வந்த நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த அபினேஷை நேற்று கைது செய்தனர். அபினேஷ் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள கார்த்தி மற்றும் மார்க்கண்டேயனை தேடி வருகின்றனர்.

Advertisement