கும்பக்கரையில் குளிக்க அனுமதி

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரம் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம் வட்டக்கானல், வெள்ளக்கெவி மற்றும் கும்பக்கரை பகுதியில் பெய்த மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அக்.16ல் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வனத்துறை குளிக்க தடை விதித்தது. நேற்று முன்தினம் (அக்.19) காலை முதல் இரவு வரை வெள்ளப்பெருக்கு குறைந்து, நீர்வரத்து சீரானது. இதனால் நேற்று முதல் சுற்றுலாப்பயணிகளை குளிக்க வனத்துறை அனுமததித்தனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து

மகிழ்ந்தனர்.

Advertisement