புள்ளியியல் துறை ஆணையர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், புள்ளியியல் துறை ஆணையர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த, தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் சத்யபிரதாசாஹூ புள்ளியில் துறை சார்ந்த திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, கடலுார் மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர்களிடம், மண்டல அவிலான பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது , 2025-26ம் ஆண்டிற்கான விழுப்புரம் மாவட்ட புள்ளியியல் கையேட்டை அவர் வெளியிட்டார். புள்ளியியல் துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் அதனை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, திண்டிவனம் அருகே மரக்காணம் வட்டாரம் கட்டளை கிராமத்தில், பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் 2026–-27ம் ஆண்டு காரிப் பருவத்திற்கான மணிலா பயிர் அறுவடை உற்பத்தியை, நிலத்திற்கே சென்று ஆய்வு செய்தார். அப்போது, நில உரிமையாளர் ஜெய்சங்கர் முன்னிலையில் அறுவடையை ஆய்வு செய்து, மகசூல் விவரங்களை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, கடலுார் மண்டல புள்ளியியல் இணை இயக்குநர் லதா, மாவட்ட துணை இயக்குநர் கனகேஸ்வரி, புள்ளியியல் ஆய்வாளர் சுபத்ரா, வேளாண் உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement