சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரத்தில், போக்குவரத்து காவல் துறை மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., மதிவாணன் பங்கேற்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரம், சாக்லெட் வழங்கி ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது, தலைகவசம் அணியாமல் வந்து 20 பேருக்கு தலைகவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன், அறக்கட்டளை இயக்குனர் அருள்ராஜ், ரெட் கிராஸ் கன்வீனர் பாபுசெல்வதுரை மற்றும் போலீசார் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்
Advertisement
Advertisement