ரோட்டில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

மானாமதுரை: மானாமதுரையில் ரோட்டில் ஆங்காங்கே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம் நீடித்து வருகிற நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மெயின் ரோடு மற்றும் தாயமங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. ரோட்டின் நடுவில் மாடுகள் கூட்டமாக அமர்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள நிலையில் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் ரோட்டிலேயே நிற்பதால் டூவீலர் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மாடு இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து வருகின்றனர். கடந்த 2வருடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும் மாடுகளின் உரிமையாளர்கள் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும், மீண்டும் மாடுகளை ரோட்டில் விடுவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

Advertisement