பி.எஸ்.பக்கத்திற்கு... துாக்கத்தில் மூச்சுத்தடை ஏற்படுவது ஏன்? டாக்டர் பால கலைக்கோவன் விளக்கம்

தமிழகம் முழுவதும் குறட்டை மற்றும் துாக்கத்தில் மூச்சுத்தடை பிரச்னையால் பாதிக்கப்பட்ட, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கடலுார், மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் உள்ள கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையத்தின் துாக்க மருத்துவ நிபுணரும், நுரையீரல் சிகிச்சை நிபுணருமான பால கலைக்கோவன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், தைவான், வியட்நாம் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் நடந்த துாக்கம் தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றேன்.

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான அடிப்படை தேவைகளில் பசி, துாக்கம் முக்கியமானவை.

இவற்றில் துாக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. போதிய துாக்கம் இல்லாமல் இருந்தால் உடல் சோர்வு, கவனக்குறைவு, ஞாபகத்திறன் குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துாக்கம் தொடர்பான பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் போதிய நேரம் துாங்காமல் இருப்பதும், இரவு நேரங்களில் நீண்ட நேரம் மொபைல், ‘டிவி’ பார்ப்பதும் அவர்களின் துாக்க சுழற்சியை பாதிக்கும். இதனால் அன்றாட நடவடிக்கை, கவனத்திறன் மற்றும் கற்றல்திறன் பாதிக்கப்படலாம்.

எனவே, குழந்தைகளின் துாக்க பழக்கங்களில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். நம்மில் பலருக்கும் துாக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது. ஆனால் துாக்க பிரச்னை பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுடன் தொடர்புடையது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

அவற்றில் முக்கியமான ஒன்று, குறட்டை தொடர்புடைய துாக்கத்தில் மூச்சுத்தடை ஏற்படுவதுதான். உடல் சோர்வாக இருக்கும் போது குறட்டை ஏற்படுவது இயல்பானது என்றும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என, பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், சிலருக்கு குறட்டை என்பது துாக்கத்தின் போது மூச்சு விடுவதில் ஏற்படும் தடையின் அறிகுறியாக இருக்கலாம்.

இத்தகை பிரச்னையை கவனிக்காமல் இருந்தால், உடல்நலத்தை பாதிக்கும். குறட்டை விடும் அனைவருக்கும் மூச்சுத்தடை பாதிப்பு இருக்கும் என்று கூற முடியாது.

துாக்கத்தில் மூச்சுத்தடை ஏன் ஏற்படுகிறது





நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கு அல்லது வாய் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலை சென்றடைகிறது.

இந்த மூச்சுப்பாதை ஏற்படும் அடைப்பு சுவாசத்தை பாதிக்கும். நாம் விழித்திருக்கும் போது மூச்சுப்பாதையை திறந்த நிலையில் வைத்திருக்க உதவும் தசைகள் இயல்பாக செயல்படுகின்றன.

ஆனால், துாங்கும் போது இந்த தசைகள் தளர்வதால், சிலருக்கு மூச்சுப்பாதை சுருங்கலாம் அல்லது அடைப்பு ஏற்படலாம். இந்த குறுகிய மூச்சுப்பாதை வழியாக காற்று செல்லும் போது, தொண்டை பகுதியில் உள்ள திசுக்கள் அதிர்வதால் குறட்டை ஒலி உருவாகிறது.

மூச்சுப்பாதை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலலோ மீண்டும் மீண்டும் அடைப்பு ஏற்படும் போது, அது துாக்கத்தில் மூச்சுத்தடை பிரச்னையாக இருக்கலாம்.

மூச்சுத்தடை பாதிப்பு உள்ளவர்களுக்கு, துாக்கத்தின் போது சுவாசம் மீண்டும் மீண்டும் தடைபடலாம். இதனால் துாக்கத்தின் தரம் குறைவதுடன், உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவும் குறையக்கூடும்.

மூச்சுத்தடையின் அறிகுறிகள்





துாக்கத்தின் போது அதிக சத்தத்துடன் குறட்டை விடுவது, துாக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வு, துாங்கும் போது மூச்சு விடுவது நின்று விடுவதாக அருகில் இருப்பவர்கள் கூறுவது, பகல் நேரத்தில் அதிகப்படியான துாக்கம் ஏற்படுவது, குறட்டை காரணமாக தனி அறையில் உறங்க வேண்டிய நிலை ஏற்படுவது, காலையில் எழுந்தவுடன் தலை வலி ஏற்படுவது.

ஞாபகத்திறன் குறைதல், உடல் சோர்வு மற்றும் ஆர்வமின்மை ஏற்படுவது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவது, ‘டிவி’ பார்க்கும் போதும், புத்தகம் படிக்கும் போது அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் போது துாக்கம் வருவது. வாகனம் ஓட்டும்போது துாக்கம் வருவது. காலையில் எழுந்தவுடன் வாய் அல்லது தொண்டை வறண்டு போவது, இரவில் அடிக்கடி துாக்கம் கலைவது அல்லது அமைதியற்ற துாக்கம் ஏற்படுவது.

இரவில் இரண்டு முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க எழுவது. நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருப்பது. கழுத்தின் சுற்றளவு ஆண்களுக்கு, 16 அங்குலத்திற்கும், பெண்களுக்கு 15 அங்குலத்திற்கும் அதிகமாக இருப்பது போன்ற அறிகுறிகள் துாக்கத்தில் மூச்சுத்தடை இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.

இதில், 3 அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறி இருந்தால் துாக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, சிகிச்சை பெறலாம். இருப்பினும், அறிகுறிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து நோயை உறுதிப்படுத்த முடியாது.

மூச்சுத்தடையால் ஏற்படும் பாதிப்புகள்





சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட, 172 வகை நோய்கள் துாக்கத்தில் மூச்சுத்தடை தொடர்புடையதாக இருக்கலாம். சிகிச்சை பெறாவிட்டால் உடல்நலத்தை பல வழிகளில் பாதிக்கும். குறட்டையை அலட்சியம் செய்யக் கூடாது.

துாக்க பரிசோதனை மற்றும் சிகிச்சை





சரியான நேரத்தில் துாக்க பிரச்னைகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது துாக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், தொடர்புடைய உடல்நல அபாயங்களை குறைக்கவும் உதவும். கடலுார், புதுச்சேரி, கோயம்புத்துார், ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் துாக்கம் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கிறேன். இந்தியா மற்றும் ஆசியாவிலேயே முதல் வயர்லெஸ் ஸ்லீப் டெஸ்ட் லேப் வசதி டாக்டர் ஸ்லீப் க்யூர் நிறுவனத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே துாக்க பரிசோதனை செய்து கொள்ளும் வசதி குறித்து அறிந்து கொள்ளவும், துாக்க பிரச்னைகளுக்கான ஆலோசனை பெறவும், டாக்டர் ஸ்லீப் க்யூர் துாக்க பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்தை 9994007000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement