லட்சுமி சோரடியா பள்ளியில் வித்யாரம்பம்

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியை ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு நெல் மணியில் அ, ஆ என, எழுத கற்றுக் கொடுத்தனர். தொடர்ந்து, கணினி முறையில் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை ஒளிபரப்பு செய்து விளையாட்டு முறையில் கல்வி கறக்கும் உபகரணங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

Advertisement