முன்னாள் அமைச்சரின் யோகா வீடியோ வைரல்

காரைக்கால்: காரைக்கால், நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்தவர் சந்திரபிரியங்கா. முன்னாள் அமைச்சர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் யோகா பயிற்சியில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

அரசியல் பணிகளுக்கு இடையே உடல் ஆரோக்கியத்திற்கும் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர் யோகாசனங்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகிறது.

Advertisement