73,933 புத்தகங்கள் கொள்முதல் 144 நுாலகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

சேலம்: சேலம் மாவட்டத்தில், மாவட்ட மைய நுாலகம், 16 முழு நேர நுாலகம், 49 கிளை நுாலகம், 78 ஊர்புற நுாலகம் என, 144 நுாலகங்கள் உள்ளன. அவற்றுக்கு, 2026 நிதியாண்டுக்கு தேவையான புத்தகங்களை கொள்முதல் செய்ய, மாவட்ட மைய நுாலகத்துக்கு, 5 லட்சம் ரூபாய்; முழு நேர நுாலகத்துக்கு தலா, 2 லட்சம்; கிளை நுாலகத்துக்கு தலா, 1.25 லட்சம்; ஊர்புற நுாலகத்துக்கு, தலா, 75,000 ரூபாய் வீதம் தனித்தனியே ஒதுக்கப்பட்டன.

அதை பயன்படுத்தி, அந்தந்த நுாலக நிர்வாகம், நேரடியாக ஆன்லைனில், தேவையான புத்தகங்களை கொள்முதல் செய்தன. அதன்படி, 506 பதிப்பகங்களில் இருந்து, 7,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கொள்முதல் செய்த, 73,933 புத்தகங்கள், சேலத்தில் உள்ள மாவட்ட மைய நுாலகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் கொண்டு வரப்பட்டன. அதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, நுாலக அலுவலர்கள் தெரிவித்தனர். அந்த புத்தகங்கள், நுாலக வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள், சம்பந்தப்பட்ட நுாலகங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

@block_B@

‘நிதி சேமிப்பு’



இதுகுறித்து தமிழ்நாடு நுாலகர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது:

இதற்கு முன் சென்னையில், 20 பேர் கமிட்டி, தமிழகம் முழுதும் புத்தகங்களை நேரடி கொள்முதல் செய்தது. அதனால் ஒரே பதிப்பக புத்தகங்கள் அதிக கொள்முதல் போன்ற பல்வேறு முறைகேடு, பண விரயம் நடந்தது. தற்போது அந்தந்த நுாலக நிர்வாகம், வாசகர்களின் கருத்துகளை கேட்டு, ஆன்லைனில் தேவையான புத்தகங்களை கொள்முதல் செய்துள்ளது. அதனால் மாவட்ட மைய நுாலகத்துக்கு ஒதுக்கிய, 5 லட்சம் ரூபாயில், தேவையான புத்தகங்கள் அனைத்தும், 3.98 லட்சம் ரூபாயில் கொள்முதல் செய்ததால், 1.02 லட்சம் ரூபாய் மீதமுள்ளது. இதேபோல் அனைத்து நுாலக நிர்வாகமும் தேவைக்கு போக, நிதியை மிச்சப்படுத்தி சேமித்துள்ளது. அதுவே கமிட்டி என்றால் ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிட்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement