குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
ராசிபுரம்:இந்திய சுதந்திர போராட்ட வீரத்தாய் குயிலியின் நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று ராசிபுரத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேய
ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுத கிடங்கை அழிக்க தன் உடலில் நெருப்பை
வைத்துக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி தாய்நாட்டிற்காக
உயிர்த்தியாகம் செய்தவர் குயிலி. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல்
பெண் தற்கொலை படை தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலியின் தியாகத்தை
போற்றும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவு தினம்
அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில்
தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், நேற்று வீரத்தாய் குயிலியின் நினைவு
தின நிகழ்ச்சி நடந்தது. தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத்
சேகுவாரா தலைமை வகித்தார். மாவட்ட, ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் முன்னிலை
வகித்தனர். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட
வீராங்கனை வீரத்தாய் குயிலியின் உருவ படத்திற்கு மலர் துாவி வீரவணக்க
முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.