பார் ஊழியர் மீது தாக்குதல் மாகே போலீஸ் வழக்கு
புதுச்சேரி: மாகேவில் பார் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கண்ணுார் அடுத்த கொப்புளில் வசிப்பவர் நவீன்,28; இவர் மாகேவில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று (அக்.,21) இரவு 10.55 மணியளவில், அவர் பாரை பூட்டும் நேரத்தில் ஒருவர் வந்து பாரி அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போது குடிக்க பியர் வேண்டும் என கேட்டுள்ளார்.
நவீன் கொடுக்க மறுக்கவே அவரை கீழே தள்ளினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அவர் நவீனை தாக்கி காலி பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், மாகே போலீசார் வழக்கு பதிந்து நவீனை தாக்கியது கேரளம் வடகராவை சேர்ந்த அபினந்த் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement