இலங்கைக்கு பிடி இலைகள் கடத்தல் துாத்துக்குடி கடத்தல்காரர்கள் 7 பேர் கைது
ராமேஸ்வரம்: இலங்கைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்திய துாத்துக்குடி கடத்தல்காரர்கள் 7 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
துாத்துக்குடியை சேர்ந்த ஆனந்த் 45, நிஷாந்த் 40, சுகிர்தன் 44, தினேஷ் 36, மிக்கேல் 30, ஞானி 27, சஞ்சய் 24, ஆகிய 7 பேர் நேற்று (அக்.,21) கடல் வழியாக இலங்கைக்கு 2400 கிலோ பீடி இலைகளை கடத்தினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம். நடுக்கடலில் இரு படகுகளில் காத்திருந்த இலங்கையை சேர்ந்த 4 கடத்தல்காரர்களிடம் அவற்றை ஒப்படைத்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 11 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னணியில் முக்கிய புள்ளிகள் உள்ளனரா என்பது குறித்து துாத்துக்குடியில் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனமழைக்கு 16 வீடுகள் சேதம் மரங்கள் முறிந்து மண்சரிவு
-
பெண் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு நிதி
-
நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில் பசுமை உலகம்!
-
உத்திரமேரூர் ஏரியில் பழுதான மதகு சீரமைப்பு பணி தொடக்கம்
-
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
-
தனுஷ், சிவகார்த்திகேயனை சாடிய ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்
Advertisement
Advertisement