துர்கா பூஜை நிறைவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் துர்கா பூஜை நிறைவு விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கோவிலில் ஆறு நாட்களாக துர்கா பூஜை, சண்டி பாராயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். விழாவில், தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் தேவி ஸ்துதி, ராமகிருஷ்ண பூஜை, துர்கா பூஜை மற்றும் சண்டி பாராயணம் ஆகியவை பக்தி பரவசத்துடன் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக மகா அஷ்டமி மற்றும் மகா நவமி நாட்களில் சிறப்பு ஹோமங்கள் நைவேத்தியங்கள், அன்னை துர்க்கையின் பெருமைகளை விளக்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தேவி விசர்ஜனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், சாரதா தேவி நாம சங்கீர்த்தனம், ராமகிருஷ்ணர் பாடிய வங்காள பாடல்களுடன் வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும்
-
பழுதான பாலம் போக்குவரத்துக்கு சிக்கல்
-
கோவை நீலகிரியில் கடந்த ஆண்டை விட அதிக மழை
-
பேரிடரில் முதலுதவி அளிப்பது எப்படி மீட்பு குழுவினர் செயல் விளக்கம்
-
போலீசின் அறிவுரையால் மக்கள் நெகிழ்ச்சி
-
பார் ஊழியர் மீது தாக்குதல் மாகே போலீஸ் வழக்கு
-
இலங்கைக்கு பிடி இலைகள் கடத்தல் துாத்துக்குடி கடத்தல்காரர்கள் 7 பேர் கைது