நெற்பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகளுக்கு பிரீமியம் செலுத்தி பதிவு செய்ய நவ.16 கடைசி நாள்
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்குமேல் நெல்சாகுபடி செய்துள்ளனர்.
பயிர் வகைகள், வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில், மத்திய அரசால் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ராபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நவ.,16 க்குள் இத்திட்டத்தில் இன்சூரன்ஸ் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிருக்கு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 409.33ம், சிவகங்கையில் ரூ.538.27ம் பிரீமியம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் தங்களது பகுதி வி.ஏ.ஓ.,விடம், பட்டா சிட்டா 10(1), வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடிக்கான அடங்கல் சான்று பெற்று, பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்