ஊதிய முரண்பாடு நீக்க கோரி துறைமுக அதிகாரிகள் போராட்டம்

சென்னை: இந்திய துறைமுகங்களில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளின் ஊதிய முரண்பாடுக்கு தீர்வு காண கோரி, சென்னை துறைமுகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து, ஊழியர்கள் இன்று (அக்.,22) போராட்டம் நடத்தினர்.

இது குறித்து, மத்திய அரசு துறைமுகங்கள் மற்றும் டாக் அதிகாரிகள் சங்க தலைவர் சந்தானம் கூறியதாவது:

முதல் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், ஓய்வு பெறும் அலுவலர்களின், ஓய்வூதியமும் பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற மூன்றாம் நிலை ஊழியருடன் ஒப்பிடும்போது, ஒருவரின் மாத ஓய்வூதியம் 16,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

துறைமுக அதிகாரிகளின் உழைப்புக்குரிய மரியாதையும், நியாயமான ஊதியம் மற்றும் ஓய்வூதியமும் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள 12 துறைமுகங்களில், மூன்று மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement