108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குவா... குவா

திருப்பூர்: படியூரில் வசிக்கும் பீஹாரைச் சேர்ந்த சங்கீதகுமாரி, 19 என்பவருக்கு நேற்று (அக்.,21) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் பைலட் ஞானப்பிரகாஷ், மருத்துவ உதவியாளர் சசிகுமார் விரைந்து வந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நாச்சிபாளையம் அருகே வலி அதிகரிக்க, ஆம்புலன்சை நிறுத்தி சசிகுமார் பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement