காளான் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு
பொன்னேரி: பொன்னேரி அருகே, விவசாய பணிகளுக்காக வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள், வயல்வெளிகளில் கிடைத்த காளானை சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சம்பா பருவத்திற்காக நடவு பணிகளை மேற்கொள்ள, ஆந்திரா மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில், பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில், நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நடவுப்பணிகளில் ஈடுபட்டனர்.
பணிகள் முடிந்து, மழையின் காரணமாக வயல்வெளியில் முளைத்திருந்த காளான்களை பறித்துவந்து சமைத்து, இரவு உணவாக சாப்பிட்டனர்.
இதனால், அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் என பாதிப்பிற்கு உள்ளாகினர்.
பாதிப்படையந்த ஆறு பெண்கள் உட்பட, 12 தொழிாலளர்கள், உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்
-
திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
-
ராகுலுக்கு தேச விரோதிகளுடன் தொடர்பு; பாஜ எம்பி பகீர் குற்றச்சாட்டு
-
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்
-
2029 மே மாதத்திற்குள் யமுனை நதி சுத்தமாகும் இலக்கு நிர்ணயித்தார் அமைச்சர் அமித் ஷா
-
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7 ஆக பதிவு
-
108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குவா... குவா