ரோட்டோர விளம்பர போர்டால் போக்குவரத்திற்கு இடையூறு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
ஒவ்வொரு கடைகளுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான பகுதியில் டூவீலர்கள் நிறுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட கடைகளில் முன்பாக விளம்பர போர்டுகளை இரண்டு அடி நீள அகலத்தில் வைக்கின்றனர்.
இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சாயல்குடி போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் போர்டுகளை அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement