கோயில்களுக்கு ஜீயர்கள் நியமனம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: மதுரை கள்ளழகர் கோயில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜீயர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. திருச்சி ஸ்ரீரங்கம் வீரராகவன் தாக்கல் செய்த பொதுநல மனு:ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம் பீடத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதன் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய நடைமுறைகள், மரபுகளின்படி மேற்கொள்ள வேண்டிய சேவைகளை, புதிதாக பொறுப்பேற்கும் ஜீயர் நிறைவேற்றுவதை உறுதி செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் சத்தியநாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாரம்பரிய மத விழாக்களை முடிவு செய்வது ஜீயர். பல ஆண்டுகளாக ஜீயரை நியமிக்கவில்லை. நியமிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள்: அழகர்கோயிலுக்கு ஜீயர் இருந்தால் என்ன பிரச்னை, ஜீயர் இல்லாததால் யார், யாரோ அதற்குரியவற்றை அனுபவிக்கின்றனர் என்றனர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,‛ஸ்ரீரங்கத்திற்கு 6 மாதம், கள்ளழகர் கோயிலுக்கு 10 மாதங்களில் ஜீயர்கள் நியமிக்கப்படுவர்,’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் அழிந்து கொண்டிருக்கும் அதிமுக, திமுக; அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
-
4 கிலோ கஞ்சா பறிமுதல்
-
பள்ளியில் ஆய்வரங்கம் துவக்கம்
-
டில்லியில் பயங்கரம்; பள்ளி வளாகத்தில் எரிந்து சடலமாக கிடந்த 12ம் வகுப்பு மாணவி
-
மரத்தில் கார் மோதி விபத்து சங்கராபுரம் அருகே வாலிபர் பலி
-
தவ அமுதம் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை