19 புதிய டவுன் பஸ் சேவைகள் துவக்கம்

விருதுநகர்: விருதுநகரில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் புதிய டவுன் பஸ் சேவைகளை துவங்கி வைத்தனர்.

கலெக்டர் ஷரண்யா அறி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், கார்த்திக் முன்னிலை வகித்தனர். விருதுநகர் கிளையில் இருந்து 5 பஸ்கள், அருப்புக்கோட்டை கிளையில் இருந்து 4 பஸ்கள், சாத்துார் கிளையில் 3 பஸ்கள், ஸ்ரீவில்லிபுத்துார் கிளையில் 2 பஸ்கள், ராஜபாளையம் கிளையில் ஒரு பஸ், காரியாபட்டி கிளையில் 3 பஸ்கள் என 19 புதிய டவுன் பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மண்டல பொது மேலாளர் கண்ணன், உதவி மேலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement