மின்சாரம் தாக்கி இளைஞர் பலி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருச்சுழி: திருச்சுழி அருகே சோலார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானதில், உரிய நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருச்சுழி அருகே பனையூர் சோலார் நிறுவனத்தில் தமிழ்பாடி ஒத்த வீடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி,22, பணி புரிந்து வந்தார். இன்று (அக்.,23) மாலை 4:00 மணிக்கு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார், உயிரிழந்த நபருக்கு உரிய நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோலார் நிர்வாகத்திடம் பேசி நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement