உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

போடி: போடி பி.ஹைச்., ரோடு, சந்தை பேட்டை தெரு, பழைய பஸ்ஸ்டாண்ட், காந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில்ராஜ்குமார், கண்ணன், சிரஞ்சீவி, லிங்கம், இளங்கோ, மீன் வளத்துறை உதவி இயக்குனர் சவுந்திரராஜன் ஆய்வு மேற்கொண்டனர். கெட்டு போன மீன்களை விற்பனை செய்யாமல் சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யுமாறு வியாபாரிகளுக்கு அறிவுத்தினர். 20 க்கும் மேற்பட்ட பெட்டிகடை, பேக்கரி, ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். பூதிப்புரத்தில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல் நடத்திய நபருக்கு ரூ.3000 அபராதம் விதித்தனர்.

Advertisement