தேசிய பள்ளிகள் போட்டிகளில் பங்கேற்க குராஷ் தற்காப்பு கலை வீரர்கள் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித் துறை சார்பில் தேசிய போட்டியில் பங்கேற்க குராஷ் தற்காப்பு கலை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
உத்திரபிரதேச மாநிலம் சன்னாப்பூரில் வரும் டிச., 16ம் தேதி முதல் 20ம் தேதி 70வது தேசியளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்பு கலை போட்டிகள் நடக்கிறது.
இதில் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் பங்கேற்க குராஷ் தற்காப்பு கலை வீரர்கள் தேர்வு முத்திரையர்பாளையம் ஆதித்யா பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
குராஷ் தற்காப்பு கலை வீரர்களை உடற்கல்வி பயிற்சியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன், ராஜாமணி, சிவமதி, ஆனந்தராஜ், குராஷ் மூத்த பயிற்சியாளர்கள் குணசேகரன், மகேஸ்வரன், பச்சையப்பன், காவல் துறையின் வீர மங்கை பயிற்சியாளர் மோகன், தேசிய பயிற்சியாளர் வினோத், நடுவர் விஷால், நிர்மல், அகத்தியன் ஆகியோர் தேர்வு செய்தனர்.
தேசிய போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வீரர்கள் தேர்வு ஏற்பாடுகளை குராஷ் சங்க பொது செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்