வீணாகும் குடிநீர் அதிகாரிகள் ‘குறட்டை’
திருப்பூர்: பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகி, கால்வாயில் கலந்து வருகிறது. புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருப்பூரின் பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ள வளம் பாலம் செல்லாண்டியம்மன்துறை ரவுண்டானா எதிரே உள்ள மிஷின் வீதி. இந்த வீதி வழியாக, நகரில் பல்வேறு பகுதிகளுக்கு மெயின் குழாய் வழியாக குடிநீர் செல்கிறது. கடந்த, 19 ம் தேதி காலை குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேற துவங்கியது. மூன்று நாட்களாக, 72 மணி நேரமாகியும் தண்ணீர் தொடர்ந்து வீணாகி, கால்வாய் சென்று கொண்டிருக்கிறது.
அப்பகுதியினர் கூறுகையில்,‘ குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாவது குறித்து தெரியப்படுத்தியும், வினியோகத்தை நிறுத்தவில்லை. வீடுகளுக்கு எட்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படும் நிலையில், இப்படி நாள்கணக்கில் கால்வாயில் தண்ணீர் ஓடி வீணாவது வேதனையாக இருக்கிறது,’ என்றனர்.
மேலும்
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
-
காதலால் சின்னாபின்னமான குடும்பம்; தாய் வெட்டிக்கொலை... இரு சிறுமிகளை கடத்திய பரோட்டா மாஸ்டர் கைது
-
கோவை பள்ளி மாணவன் தற்கொலை; குற்றவாளியை உடனே கைது செய்க; உதயநிதி