பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்

1

பெர்லின்: ஜெர்மனிக்கு சென்றுள்ள வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பெர்லின் குளோபல் மாநாட்டில்' பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது; பல ஐரோப்பிய நாடுகள் இரும்பு இறக்குமதிக்கு 50 சதவீதம் வரி, கார்பன் உமிழ்வுக்கு வரியை விதித்துள்ளன. இது பேரழிவுக்கு வழிவகுக்கும். இவை வாழ்க்கைச் செலவை உயர்த்துவதோடு, தொழில்துறையைப் போட்டியிட முடியாததாக மாற்றும். நுகர்வோரையும் பாதிக்கும்.

இரு நாடுகளும் இணைந்து புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், 330 கோடியாக இருக்கும் வர்த்தகத்தை ரூ.3,300 கோடியாக அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் கையெழுத்தாகி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement