வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு

சென்னை: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 4வது குறுகிய கால டெண்டரை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் முதல் ஜனவரி வரை 4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

நவம்பரில் 1,400 மெகாவாட், டிசம்பரில் 700 மெகாவாட், ஜனவரியில் 2800 மெகாவாட் என மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

Advertisement