விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட கோவில்களில் பிரசாதங்கள் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. கோவில்களில் பிரசாதங்கள் தரமான முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சாத்தியக்கூறு இருக்கும் கோவில்களில் மட்டும் செய்து கொண்டு இருக்கிறோம். மழையை பொறுத்த வரைக்கும், எந்தெந்த கோவில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்று தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் சர்வே எடுத்து கொண்டு இருக்கிறோம்.
நடவடிக்கை
அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வந்தால், எப்படி வெளியேற்ற வேண்டும் என்று எல்லா அறிவுறுத்தல்களையும் கொடுத்து இருக்கிறோம். முன்பே விட ஆக்டிவாக மீடியாக்களில் வரக்கூடிய, மக்கள் சொல்லக்கூடிய புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். விமர்சனத்துக்காக நாங்கள் யாரையும் கைது செய்வது கிடையாது; ஆபாசமாகவும், அவதூறாகவும், மரியாதை இல்லாமலும், முதல்வரை பார்த்து தரக்குறைவாகவும் பேசுபவர்கள் மீது தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அஞ்சமாட்டோம்
விமர்சனத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் அஞ்சாது. பதில் சொல்ல நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம். முதல்வர் விஜய்யும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்கிறார். புதிய கட்சி ஆட்சிக்கு வந்து சட்டசபையில் 50 ஆண்டு கால கட்சியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறோம். விமர்சனத்துக்கு பதில் சொல்வதில் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது.
ஆபாசமாக, அவதூறாக பேசினால் அதற்கான ஆகஷன் கண்டிப்பாக எடுப்போம். நீங்கள் என் ஆபாசமாக பேசுகிறீர்கள்; அவதூறாக பேசுகிறீர்கள், விமர்சனம் வையுங்கள்; அரசியல் ரீதியாக கருத்துக்களை முன்வையுங்கள் என்று அவர்களை பார்க்கும் மீடியாக்கள் கேட்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நாகூர் தர்ஹாவுக்கு சந்தனக் கட்டை அரசாணையை மாண்புமிகு முதல்வர் தன் கையாலேயே விழாக் குழுவினரிடம் கொடுத்தார் சந்தோசம். அதே போல் உச்சநீதிமன்ற அனுமதி பெற்று திருப்பரங்குன்ற தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான அரசாணையை என்றைக்கு மாண்புமிகு முதல்வர் ஆன்மீகப் பெரியவர்கள் கையில் கொடுக்கப் போகிறார்? மாண்புமிகு அமைச்சர் இதையும் கொஞ்சம் விளக்கினால் நல்லது.
The HRCE minister should instruct and direct the top officials that they should follow the rules and regulations of HRCE to letter and spirit. No unnecessary, illegal acts not permitted by Act should be allowed.
The High Courts orders should be implemented without any delay or fear or favour. The tendency to appeal against every order of HC, which goes against the Government should be curtailed. In short, let Ramesh take lessons from learned persons like T R Ramesh, a suave knowledgeable person, Rangarajan Narasimhan who lives in your constituency and who has excellent knowledge of HRCE act and perform his duty.
If he arrogates power to his head, the downfall is certain. Bestow your attention to temple affairs so that all the landed properties are accounted for and recovered from encroachments and encroachers and vest it back with the concerned deities.
அதெல்லாம் சரி. உங்கள் மதுரை M L A
மணவை முஸ்தபா எப்படி, எதற்காக ஒரு ஹிந்து கோயிலுக்குள் தன் மத அடையாளங்களுடன் சென்றார். அதை எப்படி நீங்கள் அமைச்சராக இருக்கும்
HRCE அனுமதித்தது. அந்த மீனாக்ஷி அம்மன் கோயில் செயல் அலுவலர் விதி மீறி செயல்பட்டதற்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?
அதே போல் திருவண்ணாமலை கோயிலில் கிருத்துவ அமைச்சர்
ஆதவ் அர்ஜுன் மற்றும் அவரது
அந்தரங்க அலுவலர் ஒரு இசுலாமியர் எப்படி அனுமதிக்கப் பட்டனர். ரமேஷ் அவர்கள் பிரசாத விநியோகம் தரம் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
கோயில்களின் ஆகம விதிகளை, HRCE சட்டங்களை சரியாக பின் பார்க்கிறார்களா என்று பார்த்தால் போதும். மேலும் அமைச்சர் HRCE உயர் அதிகாரிகளுக்கு சொல்ல வேண்டிய முக்கிய அறிவுரை : அறநிலையத் துறை மேற்பார்வையில் தான் கோயில் இருக்கிறது. அறநிலைய துறை கட்டுப் பாட்டில் இல்லை என்று தெளிவு படுத்த வேண்டும். HRCE is there only to supervise and not administer or control the affairs of the temple
Yes. HR & CE department employees and officers should realise or understand theyre only in the services of the Hindu temples and deities - God, Not ruling the temples and deities. Temples and deities are not under any Department - officers or its employees.
நீ ந்துவ இல்ல அடிமையா
திருப்பரங்குன்றம் பத்தி மட்டும் பேச மாட்டார், பதவி ஏற்றதும் அந்த கருப்பு சட்டை காரனிடம் ஆசீர்வாதம் வாங்கிய நல்லவர், ஓட்டு போட்ட ஹிந்துக்களுக்கு நன்றி
மக்கள் வைக்கும் விமர்சனம்தான் உங்களுக்கு ஆபாசமாக தெரிகிறது . விமர்சனத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள உங்களுக்கு மனம் இல்லை . மனத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
சட்ட விதிகள் மதிப்பது போல் ஆகம விதிகள் மதிக்க வேண்டும். கோவில் உள் மாறுபட்ட அந்நிய மதத்தினர் உள் செல்ல கூடாது என்றால், மந்திரியாக இருந்தாலும் செல்ல கூடாது. உங்கள் தொங்கு சட்டசபை சபாநாயகர், முதல்வர், எதிர் கட்சி தலைவர் அனைவரும் கிறித்துவர். ஆங்கிலேய ஆட்சியில் கூட இந்தளவிற்கு இருந்து இருக்காது. இந்துக்கள் ஏற்று வாழும் மன பக்குவம். ஆனால் ஒரு இசுலாமிய, கிறித்துவ நாட்டில் முடியுமா? திருப்பரங்குன்றத்தில் பிறழ் வாதம், அண்ணாமலை திரு கோவிலில் தீட்டு.? மக்கள் விமர்சிக்க தான் செய்வார்கள்.
திருமதி கார்த்திகா அவர்கள் எந்த ஆபசத்தையும் பேசவில்லை.அவர்களை ஏன் கைது செய்தீர்கள்?
விமர்சனத்திற்கு உள்ளாகுபவர் எதற்குமே வாயே திறப்பதில்லை. எப்போதுமே அவரது டப்பிங் வாய்சாக ஒரு சில அமைச்சர்கள்தான் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளனர்.
புளியோதரையும் அப்பமும்தான் , இவருக்கு ரொம்ப முக்கியம் - எப்ப பேட்டி பாத்தாலும் அதுதான் பேசுறாரு - - மத்ததெல்லாம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பாத்துக்குங்க . . . ? ?