வரும் 25ல் ஆர்.எஸ்.எஸ்., பேரணி தடை விதிக்கக்கோரி வி.சி.க., மனு
நாமக்கல்,:'பேரணியில்,
ஆயுதங்களை கொண்டு செல்வார்கள் என்பதால், சட்டம் ஒழுங்கு சீர்கெடும்
அபாயம் உள்ளது. அதனால், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்'
என, வி.சி.க., சார்பில், நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், வரும், 25 மற்றும் நவ., 1ல்,
ஆர்.எஸ்.எஸ்., சார்பில், பல்வேறு இடங்களில், பேரணி நடத்த தமிழக அரசு
அனுமதி மறுத்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., சார்பில்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஆர்.எஸ்.எஸ்., பேரணி,
தமிழகத்தில் நடத்திக் கொள்ளலாம்' என, உயர்நீதி மன்றம்
தீர்ப்பளித்தது.
அதையடுத்து, 'நாமக்கல் மாநகரில், வரும், 25ல்,
பேரணி நடக்கிறது. இப்பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்' என, வி.சி.க.,
நாமக்கல் மண்டல துணை செயலாளர் அரசன், வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர்
நடராசன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 'நாமக்கல் மாவட்டத்தில்
ஆர்.எஸ்.எஸ்., பேரணியால், பொதுமக்களின் பாதுகாப்பு, மதநல்லிணக்கம்
மற்றும் சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் இருப்பின், அனுமதியை
மறுபரிசீலனை செய்து, பேரணிக்கு தடை விதிக்க தேவையான சட்ட
நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் அமைதிக்கும்,
பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கையை எடுக்க வேண்டும். பேரணியில் பங்கேற்போர் தடி, வாள்கள்,
இரும்புத்தடி உள்ளிட்ட ஆயுதங்கள், பொதுமக்களை
அச்சுறுத்தக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்