ஜேடர்பாளையம் சாலையில் தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் அவதி
ப.வேலுார்:ப.வேலுாரில்
இருந்து ஜேடர்பாளையம் செல்லும் பிரதான சாலையில், மழை பெய்யும்
போதெல்லாம் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால், அந்த வழியாக
செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி
வருகின்றனர்.
குறிப்பாக, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி குட்டைபோல் தேங்கி நிற்கிறது.
இந்த
வழித்தடம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்
முக்கிய சாலையாக உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள அரசு மற்றும்
தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் தேங்கியுள்ள மழைநீரை
கடந்து செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த
மழை நீர் வடியாமல் பல நாட்கள் அப்படியே தேங்கி நிற்கிறது.
இதனால்,
பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை
புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என
அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்