பயிர் கடன் தள்ளுபடி செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 27 பேர் கைது
நாமக்கல்:பயிர்
கடன் தள்ளுபடி, ஸ்மார்ட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள்
சங்கங்கள், மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டக்குழு
சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு,
சி.பி.ஐ., விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை
வகித்தார்.
த.வெ.க., அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி, கூட்டுறவு
வங்கிகளில், விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை சிறு, குறு
விவசாயிகளுக்கு முழுமையாகவும், இதர விவசாயிகளுக்கு, 50 சதவீதம்
தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளையும்,
பொதுமக்களையும் பாதிக்கும், 'ஸ்மார்ட்' திட்டத்தை உடனடியாக ரத்து
செய்ய வேண்டும். பருவமழை பொய்த்ததால், பாதிக்கப்பட்ட தமிழகத்தை
வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, சாலை
மறியலில் ஈடுபட்ட, இரண்டு பெண்கள் உள்பட, 27 பேர் கைது செய்யப்பட்டு,
தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில்
விடுவிக்கப்பட்டனர்.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்