துாக்கிட்டு தொழிலாளி விபரீதம்
நாமக்கல்,:எருமப்பட்டி
அருகே, வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கலிங்கன், 50; கூலித்தொழிலாளி.
குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், இவரது மனைவி வனிதா,
கோபித்துக்கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் வீட்டிற்கு
சென்றுவிட்டார். இவர்களுக்கு, மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். அதில்,
மூன்று மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
இந்நிலையில்,
நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள, 200 அடி உயரமுள்ள உயர்
மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய கலிங்கன், தற்கொலை செய்துகொள்ள போவதாக
கூச்சலிட்டார். தகவலறிந்து வந்த, நாமக்கல் தீயணைப்பு வீரர்கள்
கலிங்கனை கீழே இறங்கி வருமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர் வரவில்லை.
இதற்கிடையே, காலை, 11:30 மணிக்கு, தன் லுங்கியால் கலிங்கன்
துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அதிக அழுத்த
மின்சாரம் சென்றதால், மீட்க முடியவில்லை. தொடர்ந்து, மின் இணைப்பை
துண்டித்து மேலே ஏறிய தீயணைப்பு வீரர்கள், கலிங்கனின் உடலை மீட்டு கீழே
கொண்டு வந்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்