குழந்தை திருமண வழக்கில் ஒன்பது பேருக்கு ‘22 ஆண்டு’
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, குழந்தை திருமண வழக்கில், ஒன்பது பேருக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம், ஓலைப்பாடியை சேர்ந்த, 15 வயது இளம்பெண்ணுக்கும், பரவாய் கிராமத்தை சேர்ந்த ஜெயபால், 28, என்பவருக்கும், 2020 ஜூன் 1ல் திருமணம் செய்து வைத்தனர். ஜெயபாலுக்கு இதய ஆப்பரேஷன் செய்துள்ளதால், குடும்பம் நடத்த இயலாத நிலையில் இருந்ததாக தெரிகிறது.
கடந்த, 2021 டிச., 17ல் மங்கலமேடு மகளிர் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து ஜெயபால், இவரது அப்பா பெரியசாமி, 65, அம்மா பட்டு, 55, சேப்பெருமாள், 45, இளம்பெண் அப்பா முத்துலிங்கம், 46, இவரது மனைவி பவுனம்பாள், 40, ராணி, 35, தர்மர், 50, ராசு, 52, கலியமூர்த்தி, 56, மாரிமுத்து, 68, ஆகிய, 11 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு, பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஜெயபால், பெரியசாமி, பட்டு, சேப்பெருமாள், ராணி, தர்மர், ராசு, கலியமூர்த்தி, மாரிமுத்து ஆகிய ஒன்பது பேருக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இளம்பெண் தாய் பவுனம்பாள் இந்த வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டார். சிறுமியின் அப்பா முத்துலிங்கம் இந்த வழக்கில் இருந்து, தீர்ப்பின்போது நேற்று விடுவிக்கப்பட்டார்.
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்