பஸ் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி கைது
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை காட்டுமன்னார்கோவிலுக்கு சென்ற அரசு பஸ், சிவாயம் நிறுத்தத்தில் நின்றது.
அப்போது, அங்கு குடிபோதையில் இருந்தவர், டிரைவர் சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்து, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து கண்டக்டர் ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் பஸ் கண்ணாடியை உடைத்த தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் அரவிந்தன், 31:என்பவரை போலீசார் கைது செய்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்மாய் தண்ணீரில் மூழ்கிய பொக்லைன் இயந்திரம் மீட்பு
-
தீபாவளி வசூல் வேட்டையில் டுபாக்கூர் நிருபர்கள்
-
டூயூசனுக்கு சென்ற மாணவர் மாயம்
-
சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையை குழப்பிய வாலிபர்
-
ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகளிடம் வசூல் காய்கறிகளை அள்ளி செல்லும் காவலாளிகள்
-
ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் 300 பேருக்கு ‘நோட்டீஸ்’
Advertisement
Advertisement