தும்மங்குறிச்சியில் 14,000 மரக்கன்றுகளுடன் 'அடர்வனம்

'நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி பகுதியில், பசுமை பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், 'மியாவாக்கி காடுகள்' எனப்படும், அடர்வன காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மூலம் மொத்தம், 14,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நகரின் பசுமை சூழலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் குறுங்காட்டில், 6,200 மரக்கன்றுகளும், இரண்டாவது குறுங்காட்டில், 7,800 மரக்கன்றுகளும் என மொத்தம், 14,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.நான்கு அடுக்கு முறையில் தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதலாவதாக புதர் அடுக்கில், மொத்த நடவுகளில், 35 சதவீதம் புதர் வகை தாவரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாவது, துணை மர அடுக்கு, மொத்த நடவுகளில், 35 சதவீதம் துணை மர வகைகள் இடம்பெறுகின்றன. மூன்றாவது, மர அடுக்கில் மொத்தம், 20 சதவீதம் மர வகைகள் இடம் பெறுகின்றன. நான்காவது உயர்மரக்குடை அடுக்கு உருவாக்கப்படுகிறது. இவை, நிழலை வழங்கி, மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், நிலத்தின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழிடத்தை உருவாக்கவும் உதவுகின்றன. 'பசுமையான நாமக்கல், துாய்மையான நாமக்கல், வளமான நாமக்கல்' என்ற நோக்கில், மாநகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி தலைமையில் இப்பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement