மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், புதிய பஸ் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், தமிழக அரசின் வெற்றி பயண திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் யுகந்தி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட நிர்வாகிகள் முருகன், அய்யனார், மும்மூர்த்தி, செல்வி, கவுரி, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில், மகளிர் இலவச வெற்றி பயண திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிடாமல், மாற்றுத்திறனாளிகளை மட்டும் புறக்கணித்து வருகின்றனர். உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் வரும் ஒரு உதவியாளருக்கும் இலவச பஸ் பயணத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement