இலங்கை அகதிகள் முகாமில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பழநி: பழநியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஏற்பட்ட மழை சேதத்தை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
பழநி சிவகிரிபட்டி ஆறுமுகம் நகர், புளியம்பட்டி ஆகிய இரு பகுதிகளில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த அக்.,23 மதியம் பெய்த மழையால் புளியம்பட்டி அகதிகள் முகாமில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இலங்கை அகதி முகாமில் நடந்து வரும் நிவாரப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் அனீஸ் சேகர் நேற்று ஆய்வு செய்தார். மேலும் பழநி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார்மங்கலபாண்டியன், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடபதி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
Advertisement
Advertisement