நல்லாம்பாளையம் போகிறது வடகோவை சரக்கு முனையம்

கோவை: வடகோவை சரக்கு முனையத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்; வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், என்று தொழில் துறையினர் கேட்டு வந்தனர். அதை ரயில்வே ஏற்றுக் கொண்டது.

1.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய சரக்கு முனையம் கட்டுவதற்காக, நல்லாம்பாளையத்தில் 30 ஏக்கர் நிலம், விஜயமங்கலத்தில் 58 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் ‘பிபிபி’ முறையில் அமைக்க, 31க்குள் விருப்ப அறிக்கை சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டி முடிந்ததும் வடகோவையில் செயல்படும் சரக்கு முனையம் இங்கு முழுமையாக இடம் மாறும்.

கோயமுத்துார் நெக்ஸ்ட் ரயில்வே பணிக்குழு இதை வரவேற்றுள்ளது. ‘சரக்கு முனையத்தை இடம் மாற்றினால், வடகோவையை பொது போக்குவரத்துக்கு மேம்படுத்தலாம். கூடுதல் பிளாட்பார்ம்கள் அமைக்கலாம்; சரக்கு வாகன போக்குவரத்தும், அதனால் உண்டாகும் நெருக்கடியும் ஓயும்’ என்று கூறினர்.

‘நல்லாம்பாளையத்தை சரக்கு மையமாகவும், வடகோவையை நவீன பயணிகள் முனையமாகவும் மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.

Advertisement