ஆய்வில் குன்றத்து சுனை தீர்த்தம்
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் முன்பு சுனை தீர்த்தம் உள்ளது. அங்கு ஏராளமான மச்ச மீன்களும் சில வெள்ளை மீன்களும் உள்ளன. அவற்றில் இரண்டு மீன்கள் இறந்து மிதந்தன. கோயில் பணியாளர்கள் அகற்றி, சுனையை சுத்தம் செய்தனர்.
பருவநிலை மாற்றம், வயது மூப்பால் மீன்கள் இறந்ததாக தெரிவித்தனர். பரிசோதனை செய்வதற்காக சுனை நீரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, வேளாண்மை கல்லுாரி ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement