97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தி.மு.க., தான் காரணம்: வைகோ
மதுரை: ‘‘தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தி.மு.க., தான் காரணம். குற்றவாளி கூண்டில் தி.மு.க., நிறுத்தப்பட வேண்டியது’’ என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
பழைய அரசுகளை எளிமையாக அணுகிய ஸ்டெர்லைட் முதலாளி, தற்போது முதல்வர் விஜயை சந்திக்க முடியவில்லை. நேர்மையான ஆட்சி என்பதற்கு இது உதாரணம். இன்று (அக்.,24) கூட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வந்தேன். முன்பு இருந்த ‘கப்பம் கட்டினால் தான்’ என்பதை நீக்கி விட்டார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது என்று தினமும் அனைத்து தரப்பிலிருந்தும் அறிக்கை விடுகிறார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சியிலும்தான் அவை நடந்துள்ளன.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரால் தான் விஜய் ஆட்சிக்கு வந்ததாக சில தலைவர்கள் சொல்கிறார்கள். 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தி.மு.க., தான் காரணம். குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது தி.மு.க., எஸ்.ஐ.ஆர்., இல்லாமல் இருந்திருந்தால் விஜய் இன்னும் கூடுதலாக 30 இடங்களை பெற்றிருப்பார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு உண்டு. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கூட்டணிக்குள் இருக்கும்போது ‘அட்டாக்’ செய்யக்கூடிய பேச்சை நான் பேசமாட்டேன். தி.மு.க.,வை மக்கள் துாக்கி எறிந்து விட்டார்கள். விஜயை ‘அட்டாக்’ பண்ணுவது தான் தி.மு.க.,வின் நோக்கம். ‘பொடா’ சட்டத்தில் பத்திரிகையாளர்களை கைது செய்யலாம் என்ற ஷரத்தை நீக்க வைத்தது நான்தான். அ.தி.மு.க., ஆட்சி நடக்கட்டும்; தி.மு.க., அதற்கு ஆதரவு கொடுக்கட்டும் என்று திரை மறைவு பேச்சு நடந்தது உண்மை.
இவ்வாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கேட்க முயன்றபோது, ‘விஜயை கொஞ்ச நாள் சும்மா விடுங்கப்பா...’ என வைகோ ஜாலியாக பதில் கூறினார்.
மேலும்
-
தேசிய மின்தேவையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு நிர்மல்குமார் கேள்வி
-
கமுதி,முதுகுளத்துார் பகுதிக்கு அக்.,29ல் கூடுதல் அரசுபஸ் இயக்க கோரிக்கை
-
இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும் பூஞ்சைகள்: பல்கலை மாநாட்டில் தகவல்
-
அக்., 27, 28ல் நடக்கும் மாநில கலைத் திருவிழா போட்டிகள்: மழை காரணமாக ஒத்திவைப்படுமா
-
‘இப்போதைக்கு இதுவும் முக்கியமே’: மது பிரியர்களை உஷார்
-
கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல் தம்பதிக்கு வலை