பழுதான பாலம் போக்குவரத்துக்கு சிக்கல்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தரைப் பாலத்தில் ஏற்பட்ட பழுதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 8வது வார்டு சொக்கலிங்கேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தரைப்பாலம் பழுதடைந்து உள்ளது. கடந்த, 40 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. தரைபாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, 8வது வார்டு கவுன்சிலர் சிவராஜ் கூறுகையில், இந்த பாலம் வழியாக ஜெயா நகர், பி.ஆர்.ஏ., நகர், ஜே.கே. நகர், சக்தி நகர் உள்ளிட்ட பொதுமக்களும், 8, 13, 14, 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் ஒரு பக்கம் துளை விழுந்து, கல் தூண்களும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பாலத்தை பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே அச்சம் உள்ளது. இது குறித்து கடந்த, 20 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவசர, அவசியம் கருதி, கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பாலத்தை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement