பல நாடுகளில் இது தேர்தல் காலம்
போர்கள், இயற்கை பேரிடர்கள், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் என உலக நாடுகள் பரபரப்பாக இயங்கி கொண்டிக்கும் வேளையில், சில நாடுகளில் தற்போது தேர்தல் சீசன் நடந்து வருகிறது. அமெரிக்க பார்லிமென்டுக்கு வரும், நவ., 3ல் இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது.
இதைத் தவிர பல நாடுகளில் பார்லிமென்டுக்கும், பிரதமர், அதிபரை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடக்கிது. தேர்தல் நடக்கும் நாடுகளில் தற்போதைய ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை மக்களிடையே வலுவடைந்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை:
இஸ்ரேலில் பிரதமர் தேர்தல்
ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலில், கடந்த 2023ல் ஹமாஸ் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்களுக்கு பின் முதல்முறையாக நாளை அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தல் நடைபெறுகிறது.
இஸ்ரேலிய சட்டப்படி, அந்நாட்டின் குடிமக்கள் அந்நாட்டிற்குள் நேரில் வந்துதான் ஓட்டளிக்க வேண்டும். தபால் ஓட்டுகள் அல்லது வெளிநாட்டு ஓட்டு பதிவு முறை என்பது கிடையாது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை கையாண்ட விதம் மற்றும் இஸ்ரேல் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுத்த நிலைப்பாடு குறித்த ஒரு பொதுவாக்கெடுப்பாகவே இது பார்க்கப்படுவதால், இஸ்ரேல் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலில் 73 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கருத்துக் கணிப்புகளில் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரிய அதிபருக்கு சிக்கல்
அபுஜா: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், பார்லிமென்ட் மற்றும் அதிபருக்கான பொதுத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக, 2023 பிப்.,ல் நடந்த தேர்தலில் வென்று, லா டினுபு அதிபரானார்.
எரிபொருள் மானியங்களை நீக்குவது உட்பட பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். சர்வதேச நிதி அமைப்புகள் இதற்கு பாராட்டு தெரிவித்தாலும், நைஜீரிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடுமையான பணவீக்கம், விண்ணை முட்டும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள், மோசமடைந்து வரும் நைஜீரிய பொருளாதாரம் உள்ளிட்டவைகளால் டினுபு அரசு மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜன.,ல் நடக்கும் தேர்தலில், அதிபர் டினுபுவை எதிர்த்து பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. கடும் அதிருப்தி இருப்பதால் டிபுனுவுக்கு சிக்கல் என்றே கூறப்படுகிறது.
பிரேசிலில் அதிபர் தேர்தல்
சாவோ பாலோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த அக்டோபர் 4ல் நடந்த அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறவில்லை. இதையடுத்து, முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களுக்கு இடையேயான இரண்டாம் சுற்று தேர்தல் நேற்று நடந்தது.
இடதுசாரி தலைவரும், பிரேசிலின் தற்போதைய அதிபருமான லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா, 80, மற்றும் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனரோவின் மூத்த மகனும், வலதுசாரி செனட்டருமான பிளாவியோ போல்சோனரோ, 45, இடையே இந்த இரண்டாம் சுற்று தேர்தல் நடக்கிறது. முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ மீதான ஊழல் வழக்குகளால் அவர் போட்டியிட முடியாததால், அவருக்கு பதிலாக அவரது மகன் களமிறங்கியுள்ளார்.
முதல் சுற்றில் பிளாவியோ 47 சதவீத ஓட்டுகளும், தற்போதைய அதிபர் லுாலா 45 சதவீத ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.
செர்பிய பிரதமருக்கு சவால்!
பெல்கிரேடு : ஐரோப்பிய நாடான செர்பியாவில் நேற்று பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. நீண்ட காலமாக ஆட்சி பொறுப்பில் உள்ள செர்பிய முற்போக்கு கட்சியின் தலைவரும், பிரதமருமான அலெக்சாண்டர் வூசிச்சின் 12 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து 'மாணவர் பட்டியல்' என்ற பெயரில் மாணவர் இயக்கம் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளது.
அரசுத் துறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ள ஊழல், அலட்சியம் மற்றும் பொது உள்கட்டமைப்பு திட்டங்களில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றை எதிர்த்து மாணவர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
செர்பியாவில் தற்போதைய பார்லிமென்டின் பதவிகாலம், 2027 இறுதியில் தான் நிறைவடைகிறது. ஆனால், அங்கு மாணவர் இயக்கம் மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று அதற்கான ஓட்டு பதிவு நடந்தது. பிரதமர் வூசிச்சுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
டிரம்ப் அண்ணன் இந்த தேர்தலில் தேறுவாரா? வராம இருந்தா நல்லது. ஆனா அண்ணன் 4000 டாலர் கொடுக்கறேன்னு சொல்லிருக்காரு. பார்க்கலாம்.
இவர் பிரிக்ஸ் அமைப்பில் மிகவும் பிரபலமானவர். இது மக்கள் மற்றும் வணிகங்களுடன் வீட்டிற்கு ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. டிரம்ப் முகத்தில் கரி பூசியது மாதிரி.மேலும்
-
நவ. 1 முதல் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்; டாஸ்மாக் அறிவிப்பு
-
விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா என்.எல்.சி.,யில் துவங்கியது
-
நாய்கள் தாக்கி ஆடுகள் பலி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
-
மழை நீர் தேங்கி நெற்பயிர் அழுகல் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
-
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிச.,20ல் சிறப்பு டெட் தேர்வு