கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
மேட்டுப்பாளையம்:''எந்த மொழியையும் மாணவர்கள் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்,'' என, பி.எஸ்.என்.எல்., முன்னாள் இணை இயக்குனர் கவேத்திரங்கன் பேசினார்.
மேட்டுப்பாளையம் கல்லாறு, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் கவிதாசன் எழுதிய சிந்தனை வரிகளை, ஓய்வு பெற்ற ஹிந்தி ஆசிரியர் விஜயகுமார், "மன் கி தீபக்' (உள்ளத்தின் ஒளி) என்ற தலைப்பில் ஹிந்தியில் நுாலாக்கம் செய்துள்ளார். நுால் வெளியீட்டு விழா, சச்சிதானந்த பள்ளியில் நடந்தது.
பள்ளி செயலர் கவிதாசன் பேசியதாவது: பாரதியார் பல மொழிகளை கற்றவர். இத்தனையும் அறிந்த பின் தான் அவர், 'யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றார்.
எல்லா மொழியையும் வாசியுங்கள். தமிழ் மொழியை சுவாசியுங்கள். நீங்கள் சாதனையாளர்களாக மாற வேண்டும். என்னால் முடியும் என்று நீங்கள் நினைத்தால், அதை எப்படி செய்வது என்று வழிகளை, உங்கள் மனம் யோசிக்கும். முடியாது என்று நினைத்து விட்டால், செய்யாமல் இருப்பதற்கான ஆயிரம் காரணங்களை அது அடுக்கும். காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்களே மாற்றி அமையுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நுாலை வெளியிட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குனர் கவேத்திரங்கன் பேசுகையில், ''எந்த மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள வேண்டும். வேலையை தள்ளிப் போடாதீர்கள். நாளை செய்வதை இன்றே செய்யுங்கள். இன்று செய்வதை இப்பொழுதே செய்யுங்கள். அன்றாட வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் முடித்து விடுங்கள். தவறை உணருங்கள், ஆணவம் கூடவே கூடாது. எவன் ஒருவன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்கிறானோ, அவனே வெற்றியாளன். நல்ல நுால்களை படித்து, நற்பண்புகளை வளர்த்து, உலகெங்கும் ஒளிருங்கள்,'' என்றார்.
பிரேம்சந்த் ஹிந்தி மன்ற மாணவ, மாணவியர், கவிதை வாசித்தனர். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்வி முதன்மையர் ஷீலா கிரேஸ் ஆகியோர் விழாவில் பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஹிந்தி ஆசிரியர்கள் ரின்டோ, மாதவி, சங்கீதா, விழா ஏற்பாடுகளை
செய்திருந்தனர்.
மேலும்
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது
-
4 வயது குழந்தை உள்பட பலரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்