ஆய்வுக்கு சென்ற பொறியாளரிடம் நகை பறிக்க முயன்ற அட்டூழியம்

திருப்பூர்: நல்லுார் மண்டல உதவி பொறியாளர் ஜீவிதா, 30 நேற்று (அக்.,21) தாராபுரம் ரோடு கோவில் வழியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மையத்தை சுற்றி திறந்தவெளி காட்டுப்பகுதியாக உள்ளதால் வெளிநபர்கள் வராத வகையில் சுற்றுச்சுவர் எழுப்ப திட்டமிட்டு இடத்தை பார்வையிட்டார்.

அப்போது புதருக்குள் இருந்த வாலிபர் திடீரென பின்னால் இருந்து நகையை பறிக்க முயன்றார். உதவி பொறியாளர் கையால் தடுத்தபோது வாலிபர் வைத்திருந்த பிளேடால் கிழித்தார். அவர் சத்தம் போட, அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர் தப்பியோடி விட்டார். நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குப்பை மையம் உள்ள இடம் புதர் மண்டி காட்டுப்பகுதியாக உள்ளது. போதை ஆசாமிகள் அங்கு அமர்ந்து கஞ்சா, மது குடித்து வருகின்றனர். பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் புதரை சுத்தம் செய்து ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement