திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7 ஆக பதிவு

தைபே: திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 7 ஆக பதிவானது.இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை.

திபெத்தின் வடக்கு பகுதியில் நக்கியூ என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி இரவு 10:33 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேரை காணவில்லை. பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதி அருகே உள்ள திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement