திடக்கழிவு விதிமீறல் ரூ.3.5 லட்சம் அபராதம்

திருப்பூர்: மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:

மாநகராட்சி பகுதியை துாய்மையாக, சுகாதாரமாக பராமரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கடந்த செப்டம்பர் முதல் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 144 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 3,55,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த மறுத்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யும் மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் மாநகராட்சி அங்கீகரித்த நிறுவனத்திடம் வழங்க வேண்டும். 100 கிலோவுக்கு குறைவாக உற்பத்தி செய்யும் வணிக, தொழில் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சி ஒப்பந்ததாரர் அல்லது பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும்.

Advertisement