துபாயைவிட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மிகவும் குறைவு

16

துபாய்: துபாயை விட இந்தியாவில் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது. குறிப்பாக, டீசல் விலை கணிசமான அளவில் குறைவாக உள்ளது.

பொதுவாக எரிபொருள் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. இதற்கு மாறாக, சில்லரை விலை எரிபொருள் விற்பனையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயுடன் ஒப்பிடுகையில், தலைநகர் டில்லியில் எரிபொருட்களின் விலை குறைவாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி, துபாயில் 'ஸ்பெஷல் 95' ரக பெட்ரோல் லிட்டருக்கு, 110.04 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், டில்லியில் லிட்டர் 102.12 ரூபாயாக இருந்தது. இது துபாயை விட, 7.82 ரூபாய் குறைவாகும். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 107.76 ரூபாயாக இருந்தது.

டீசலை பொறுத்தவரை விலை வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது-. துபாயில் டீசல் விலை லிட்டருக்கு 123.41 ரூபாயாக உள்ள நிலையில், டில்லியில் 95.20 ரூபாயாக உள்ளது. இது துபாயை விட 28.21 ரூபாய் குறைவாகும். சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 99.55 ரூபாயாக உள்ளது.

இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எரிபொருள் விலையை கணிசமாக உயர்த்தியதே காரணம் என கூறப்படுகிறது.

Advertisement