‘ஆன்லைன்’ கொள்முதல் கூட்டுறவு துறை நிறுத்தம்
சென்னை: கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, ‘பிராண்டட்’ பொருட்களை, ‘ஆன்லைன்’ வாயிலாக கொள்முதல் செய்வதில் இருந்து விலக்கு அளித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் சார்பில், 300 பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மளிகை மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. கூட்டுறவு ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன.
இந்த பொருட்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள், வணிகர்களிடம் இருந்து, கூட்டு கொள்முதல் குழுக்கள் வாயிலாக வாங்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால், ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்களை கொள்முதல் செய்து விற்க, கூட்டுறவு துறை சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
ஆன்லைன் கொள்முதல் தொடர்பாக பலருக்கு விபரம் தெரியாததால், பொருட்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல அங்காடிகளில் வாடிக்கையாளர் விரும்பும் பொருட்கள் இல்லாததால், விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை, ஆன்லைன் கொள்முதல் செய்வதில் இருந்து கூட்டுறவு துறை விலக்கு அளித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, நிர்வாக காரணங்களுக்காக, பிராண்டட் பொருட்களுக்கு மட்டும், வரும் நவ., 30ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக கொள்முதல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அப்பொருட்களை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி கொள்முதல் செய்யலாம்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
முதல்வர் குறித்து அவதுாறு
-
சாலைகள் தெரு விளக்குகள் பராமரிக்க கலெக்டர் உத்தரவு
-
பருவமழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க 227 நிவாரண மையம், 112 சமையல் கூடம் தயார்
-
வீட்டின் முன் மரக்கிளை, கழிவு மண் தட்டிக்கேட்ட டாக்டரை தாக்க முயற்சி: திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அராஜகம்
-
பிளஸ் -1 மாணவர் தற்கொலை பள்ளி வகுப்பாசிரியர் கைது
-
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பு பா.ஜ., இப்ராஹிம் குற்றச்சாட்டு