தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பு பா.ஜ., இப்ராஹிம் குற்றச்சாட்டு
கோவை: ‘‘தி.மு.க., ஆட்சியை காட்டிலும், தற்போது போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது,’’ என்று, வேலுார் இப்ராஹிம் கோவையில் நடந்த போதை பொருள் விழிப்புணர்வு யாத்திரையில் கூறினார்.
மாவட்ட பா.ஜ., சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு யாத்திரை, கணபதி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராசு கொடியசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த தி.மு.க., ஆட்சியை காட்டிலும், தற்போது போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பல குடும்ப தலைவர்கள் போதையால் சீரழிந்து, குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.
தாய்மார்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த விஷயத்தில், ஜாதி மத பேதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதையை நாம் அழிக்காவிட்டால், ஒட்டுமொத்த மனித சக்தியே அழியும் நிலை ஏற்படும். தமிழக அரசு இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி, போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
போதை ஒழிப்பு யாத்திரை, கணபதி பஸ் ஸ்டாண்டிலிருந்து ரத்தினபுரி, நல்லாம்பாளையம் சாலை, ரூட்ஸ் வரை சென்று முடிந்தது.
பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் மதன் மோகன், மாவட்ட செயலாளர் துரை, கணபதி மண்டல் பொறுப்பாளர்கள் செந்தில்குமார், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது