சாலைகள் தெரு விளக்குகள் பராமரிக்க கலெக்டர் உத்தரவு

சென்னை: ‘‘சென்னையில், சேதமடைந்த சாலைகள் மற்றும் பழுதடைந்த தெரு மின் விளக்குகளை பராமரிக்க வேண்டும்,’’ என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார்.

பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகத்தின் கூட்டரங்கில், நெடுஞ்சாலை, காவல், போக்குவரத்து, மெட்ரோ ரயில், வருவாய் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன், நேற்று கூட்டம் நடந்தது.

கலெக்டர் மாலதி ஹெலன், அதிகாரி களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில், விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாலை விபத்துகளை குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பு பயணத்தை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த அனைத்து சாலைகளையும், தெரு மின் விளக்குகளையும் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement