மத பிரசாரத்திற்கு வந்தவர் உடல் நலம் குன்றி இறப்பு
காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் மத பிரசாரத்திற்கு வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
குஜராத் மாநிலம் பஞ்சுமகால் மாவட்டம் கோத்ராவைச் சேர்ந்தவர் முகமது இக்பால்,62; ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், முஸ்லீம் மார்க்க போதகராக உள்ளார்.
இவர், 12 பேருடன் கடந்த 24ம் தேதி குஜராத்தில் இருந்து வந்து லால்பேட்டை மனேஷா பள்ளிவாசலில் தங்கி, வீடு, வீடாக சென்று மத மார்க்கம் செய்து வந்தார்.
இந்நிலையில் முகமது இக்பாலுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இவர், ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.